கொழும்பு – வனாத்தமுல்லையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சோதனை நடத்தப்பட்ட போது பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் இரண்டு இராணுவ வீரர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதே பகுதியை சேர்ந்த 25 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.