Friday, April 24, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டு'ஜோன் கொல்லா' கைது

‘ஜோன் கொல்லா’ கைது

3 கொலை சம்பவங்களில் குற்றஞ்சாட்டப்பட்டு தலைமறைவாக இருந்த ஜோன் கொல்லா என்றழைக்கப்படும் நபர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மெட்டியகொட – மத்திவல பிரதேசத்தில் வைத்து துப்பாக்கியுடன் அவர் கைதானார்.

கடந்த 10ஆம் திகதி மட்டிவல பிரதேசத்தில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டையின் போது குறித்த நபர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், துப்பாக்கிச்சூட்டினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பதுடன், இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.

​​36 வயதான ஜோன் கொல்லா என்ற சந்தேக நபரே இவ்வாறு கைதாகியுள்ளார்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மீது 3 கொலை வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles