Monday, December 22, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயாழில் பெண்ணொருவர் தாக்கப்பட்டு கொலை

யாழில் பெண்ணொருவர் தாக்கப்பட்டு கொலை

யாழ்ப்பாணம் – அத்தியடி பகுதியில் பெண்ணொருவர் நேற்று (12) இரவு கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில், தமது பிள்ளையுடன் தனிமையில் வசித்து வந்த 55 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.

மரக்கட்டை ஒன்றினால் குறித்த பெண்ணின் தலைப்பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில், கொலைக்கான காரணத்தை கண்டறியும் நோக்கில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles