Saturday, August 16, 2025
28.4 C
Colombo
செய்திகள்உலகம்பிரபாகரன் உயிருடன் உள்ளார் - பழ. நெடுமாறன்

பிரபாகரன் உயிருடன் உள்ளார் – பழ. நெடுமாறன்

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் எனவும், அவருடன் தொடர்பில் இருப்பதாகவும் உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்தார்.

பிரபாகரனின் அனுமதியின் பேரிலேயே இதை வெளியிடுகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறியதாவது:-

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் நலமுடன், உயிருடன் உள்ளார். பிரபாகரன் நலமுடன் இருப்பது ஈழத்தமிழர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். பிரபாகரன் குறித்து தவறான தகவல் பரப்பப்பட்டு விட்டது. அவருடன் தொடர்பில்தான் உள்ளோம்.

பிரபாகரனின் அனுமதியின் பேரிலேயே இந்த செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறுகிறது. பிரபாகரனின் மனைவி, மகளும் நலமுடன் உள்ளனர். உரிய நேரத்தில் மக்கள் முன் வருவார்.

பிரபாகரன் எங்கு உள்ளார் என்பது தற்போது அறிவிக்க இயலாது. தமிழக அரசும், மக்களும் பிரபாகரனுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

இலங்கையில் ராஜபக்ஷர்களின் ஆட்சி முடிவுக்கு வந்திருப்பதால் இந்த அறிவிப்பை வெளியிடுகிறோம் என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles