Tuesday, December 23, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையில் ஏற்பட்ட நில அதிர்வுகள் குறித்த தகவல்

இலங்கையில் ஏற்பட்ட நில அதிர்வுகள் குறித்த தகவல்

இலங்கையின் புத்தல, வெல்லவாய மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் 48 மணி நேரத்தில் பல்வேறு சிறிய நில அதிர்வுகள் உணரப்பட்டன.

இவை 3 மெக்னிடியூட்டுக்கும் குறைவான அளவில் பதிவாகி இருந்த நிலையில், அங்குள்ள கட்டடங்களுக்கு அவற்றால் ஆபத்தில்லை என, இலங்கை கட்டிட ஆய்வு மற்றும் சுரங்கத்தொழில் பணிமனை தெரிவித்துள்ளது.

அதேவேளை இலங்கை புவித்தகட்டின் எல்லையில் இருந்து வெகுதொலையில் அமைந்துள்ளதால், இங்கு பாரிய நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை என, அந்த பணிமனையின் பணிப்பாளர் கலாநிதி ஆசிரி கருணாவர்தன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தொடர்ச்சியாக இவ்வாறான நில அதிர்வுகள் ஏற்படுமாக இருந்தால், அவதானமாக இருக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் உமாஓய வேலைதிட்டத்துக்கும், அங்கு ஏற்பட்ட நில அதிர்வுகளுக்கும் தொடர்புகள் இருப்பதாக உறுதிபடுத்த முடியாது என்று தெரிவித்த அவர், உமாஓய நீர் நிலையில் முழுமையான நீர் நிரம்பியதன் பின்னர், நீரின் அழுத்தம் காரணமாக கண்டியில் நில அதிர்வுகள் ஏற்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles