ஜம்மு-காஷ்மீரில் முதல் முறையாக லித்தியம் படிவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.
அதில் 5.9 மில்லியன் டன் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகெங்கிலும் உள்ள கணினிகள், மொபைல் போன்கள் மற்றும் மின்சார கார்களுக்கான பேட்டரிகள் தயாரிப்பதற்கு லித்தியம் ஒரு அத்தியாவசியப் பொருளாகக் கருதப்படுகிறது.