Friday, August 15, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டு15 இலட்சம் ரூபா பெறுமதியான கஞ்சாவுடன் இருவர் கைது

15 இலட்சம் ரூபா பெறுமதியான கஞ்சாவுடன் இருவர் கைது

தனமல்வில கஹகுருலம்பெலஸ்ஸ பிரதேசத்தில் இரண்டு கஞ்சா தோட்டங்களை சுற்றிவளைத்த பொலிஸார் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

தனமல்வில தலைமையக பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டது.

இரண்டு கஞ்சாக் தோட்டங்களிலும் 4 அடி உயரமுடைய 4,000 கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டிருந்ததாகவும், அவற்றின் பெறுமதி 1,500,000 ரூபாவுக்கு மேல் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அதே பிரதேசத்தை சேர்ந்த இருவராவர்.

சந்தேக நபர்கள் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தனமல்வில பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles