Sunday, February 15, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபயங்கரவாத குற்றச்சாட்டில் கைதான ரஷீத் அக்பர் விடுதலை

பயங்கரவாத குற்றச்சாட்டில் கைதான ரஷீத் அக்பர் விடுதலை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட ஜமாத்தே இஸ்லாம் அமைப்பின் முன்னாள் தலைவர் ரஷீத் அக்பரை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஷெஹான் அமரசிங்க நேற்று (8) உத்தரவிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரையின் பேரில் கைது செய்யப்பட்ட ரஷித் அக்பர், வஹாப் வாதத்தை ஊக்குவித்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.

எவ்வாறாயினும், ரஷீத் அக்பருக்கு எதிரான விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவரை விடுவிப்பதில் ஆட்சேபனை இல்லை என சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்திருந்த நிலையில், கொழும்பு மேலதிக நீதவான் அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்தார்.

நீதிமன்றத்தின் வசமிருந்த ரஷித் அக்பரின் வெளிநாட்டு கடவுச்சீட்டும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles