புறக்கோட்டை ஜெயா மொத்த விற்பனை சந்தையில் சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்துள்ளது.
ஒரு கிலோ பருப்பின் விலை 30 ரூபாவால் குறைந்துள்ளது. அதன்படி புதிய விலை 330 ரூபா.
இதேவேளை, மொத்த சந்தையில் ஒரு கிலோ பெரிய கிழங்கு 110 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு ஒரு கிலோ 100 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன், ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 215 ரூபாவிலிருந்து 230 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும், இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனியின் மொத்த விலை 215 ரூபாவாகவே உள்ளது.