Friday, April 10, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரதல்ல வீதி மீண்டும் திறக்கப்பட்டது

ரதல்ல வீதி மீண்டும் திறக்கப்பட்டது

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் ரதல்ல குறுக்கு பாதையின் ஊடாக பயணிக்க, 5 டன்களுக்கும் குறைவான எடையுள்ள வாகனங்களுக்கு இன்று (8) முதல் அனுமதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆம் திகதி அந்த வீதியில் பேருந்தொன்று வேன், முச்சக்கரவண்டி ஒன்றை மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்ததுடன், 53 பேர் காயமடைந்தனர்.

இதனால் கனரக வாகனங்களுக்கான குறித்த குறுக்கு பாதை தற்காலிகமாக மூடப்பட்டது.

எவ்வாறாயினும், வாகன போக்குவரத்து தொடர்பாக ரதல்ல குறுகிய பாதையை மேற்பார்வையிட பல போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles