Sunday, May 31, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுச்சக்கர வண்டி விபத்தில் 9 மாதக் குழந்தை பலி

முச்சக்கர வண்டி விபத்தில் 9 மாதக் குழந்தை பலி

குருநாகல் வாவி சுற்றுவட்ட வீதியில் யத்தம்பலாவையிலிருந்து பமுனுகெதர நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் 9 மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

நேற்று (7) இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த முச்சக்கர சாரதி உள்ளிட்ட ஐவர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்களில் 9 மாதக் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி தொலைபேசி கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் சிக்கியவர்கள் பமுனுகெதர பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles