Sunday, November 17, 2024
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாட்டை மீட்கவே விரும்புகிறேன் - ஜனாதிபதி

நாட்டை மீட்கவே விரும்புகிறேன் – ஜனாதிபதி

புதிய வரிக் கொள்கைகளை அறிமுகப்படுத்துவது அரசியல் ரீதியாக விரும்பத்தகாத முடிவாக பார்க்கப்படுகிறது. எனினும், நாட்டை மீளக் கட்டியெழுப்ப மக்கள் விரும்பத்தகாத முடிவுகளை எடுக்க தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை முன்வைத்து உரையாற்றுகையில், அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், நேரடி வரிகளை அதிகரிப்பதன் மூலம் மக்களின் ஒட்டுமொத்த வரிச்சுமையையும் குறைக்க முடியும்.

நான் பிரபலமாக இருக்க விரும்பவில்லை. இந்த நாடு விழுந்துள்ள நெருக்கடியிலிருந்து மீண்டும் கட்டியெழுப்ப விரும்புகிறேன்.

நாட்டின் நலனுக்காக மக்கள் விரும்பத்தகாத முடிவுகள் எடுக்கப்படுகின்றன. எனினும், இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் அந்த முடிவுகளின் முக்கியத்துவம் பலருக்கும் புரியும்.

வரி விதிக்கக்கூடிய வருமான வரம்பை ரூ.1 இலட்சத்தில் இருந்து ரூ.2 இலட்சமாக உயர்த்த வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.

PAYE வரி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இந்த வரிகள் தானாக முன்வந்து விதிக்கப்படவில்லை.

ஆனால் நாம் விரும்பியதைச் செய்வதன் மூலம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. நீங்கள் விரும்பாவிட்டாலும், சரியானதைச் செய்யுங்கள்.

PAYE வரி ஒழிக்கப்பட்டால் நாட்டுக்கு 100 பில்லியன் ரூபா இழப்பு ஏற்படும். வரி வரம்பை இரண்டு இலட்சமாக உயர்த்தினால், நாட்டுக்கு 63 பில்லியன் ரூபா இழப்பு ஏற்படும். இழப்படும் மொத்தத் தொகை 163 ரூபாவாகும். இந்த பணத்தை இழக்கும் இடத்தில் நாங்கள் இல்லை. சமூகத்தின் அனைத்து மக்களுக்கு வாழ்வது மிகக் கடினம். ஆனால் இந்த கஷ்டத்தை இன்னும் 5 முதல் 6 மாதங்கள் பொறுத்துக்கொண்டால் ஒரு தீர்வை எட்டலாம். இப்படியே தொடர்ந்தால், 3, 4 ஆம் காலாண்டில் அரசு ஊழியர்களுக்கு கூடுதல் கொடுப்பனவு வழங்கலாம்.

தனியாருக்குச் சலுகை அளிக்கலாம். முழு நாட்டு மக்களின் கைகளையும் இன்றையும் விட வளப்படுத்த முடியும்.

வேலைவாய்ப்பினால் வருமானம் பெருகும். வங்கி வட்டியை குறைக்கலாம். அடுத்த மூன்று ஆண்டுகளில், நாட்டு மக்கள் இன்று பெறுவதை விட 75% கூடுதல் வருமானத்தைப் பெற முடியும். உண்மையான வறிய சமூகத்தை அடையாளம் காண்பது. மானியத்துடன் கூடிய வங்கிக் கணக்கு மூலம் நேரடியாக பணமாக உதவி வழங்கும் திட்டத்தைத் தயாரித்து வருகின்றனர்.

ஆனால் சில குழுக்கள் இந்த பாதையை உடைக்க முயற்சிக்கின்றன. நான் ஒருபோதும் சாத்தியமற்றது என்று சொல்லவில்லை. அதிகாரத்திற்காக பொய் சொல்லாதீர்கள். பாதீட்டு உரையிலும், பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்ப நிகழ்விலும் கூறப்பட்ட அனைத்தையும் செயல்படுத்த உள்ளேன். இப்போது அதன் மூலம் பொருளாதாரத்தில் ஓரளவு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடிந்துள்ளது. பொய்களால் எதிர்காலத்தை கட்டியெழுப்ப முடியாது என்பதை பலர் இப்போது புரிந்துகொள்கிறார்கள்.

நாம் இப்போது எதிர்மறைப் பொருளாதாரத்திலிருந்து நேர்மறைப் பொருளாதாரத்திற்கு நகர்ந்து கொண்டிருக்கிறோம். 2023ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இந்த தருணத்தில் தாய்நாட்டிற்கு அதிகபட்ச ஆதரவை வழங்குகிறார்கள்.

2022 இறுதிக்குள், அவர்கள் எங்களுக்கு 4 பில்லியன் டொலர் அன்னியச் செலாவணியைக் கொடுத்தனர். பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களை வெவ்வேறு வழிகளில் செல்வாக்கு செலுத்துவதன் பின்னணியில் நமது தொழில்முனைவோர் மற்றும் வெளிநாட்டு பணியாளர்கள் இந்த உறுதிமொழியை வழங்கினர்.

ஆனால் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதும் இலங்கைக்கு பணம் அனுப்புவதும் ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சிகளுக்கு அல்ல நாட்டிற்கு என்று நிரூபித்தார்கள். அவர்கள் அனைவரும் நமது மரியாதைக்கு உரியவர்கள்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles