Friday, April 10, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசகோதரன் கொலை: 14 வயதான சிறுவன் கைது

சகோதரன் கொலை: 14 வயதான சிறுவன் கைது

களுத்துறை, தேக்கவத்தை பிரதேசத்தில் சகோதரனை கூரிய ஆயுதத்தால் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் 14 வயதுடைய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இக்கொலை நேற்று (07) பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், தாக்குதலில் படுகாயமடைந்த நபர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தந்தையை பார்ப்பதற்காக அவர்களது தாய் வைத்தியசாலைக்கு சென்ற போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றியதையடுத்து இளைய சகோதரன் கூரிய ஆயுதத்தால் மூத்த சகோதரரனின் கழுத்தில் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்துன் என்றழைக்கப்படும் அனுருத்த தனஞ்சய டி சில்வா என்ற 26 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதியே தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles