Monday, June 22, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டு37 இலட்சம் பெறுமதியான செப்பு கேபிள்களை திருடிய மூவர் கைது

37 இலட்சம் பெறுமதியான செப்பு கேபிள்களை திருடிய மூவர் கைது

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை அபிவிருத்தி அதிகார சபையின் வல்கம தலைமை அலுவலகத்தில் இருந்து செப்பு கேபிள்களை வெட்டி விற்பனை செய்த மூவரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த அலுவலகத்தின் தனியார் பாதுகாப்பு பிரிவின் முன்னாள் நிலைய பொறுப்பதிகாரி உட்பட மூவர் கைது செய்யப்பட்டதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.

திருடப்பட்ட செப்பு கேபிள்கள் சுமார் 37 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் தங்கொடுவ மற்றும் உட கெதர மற்றும் ஹொரண பிரதேசங்களில் வசிக்கும் 35 மற்றும் 52 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான அலுவலகத்தில் இருந்து செப்பு கம்பி காணாமல் போனதாக பண்டாரகம பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் ஊடாக சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles