கோடீஸ்வர வர்த்தகரின் கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை எதிர்வரும் 15 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 02 ஆம் திகதி பத்தரமுல்லை பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றின் நீச்சல் தடாகத்தில் இருந்து வீட்டின் உரிமையாளரான வர்த்தகர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
உயிரிழந்தவர் பிரபல ஆடையகம் ஒன்றின் உரிமையாளராவார்.
குறித்த தொழிலதிபர் கடந்த மாதம் 31 ஆம் திகதி அந்த வீட்டிற்கு செல்வதாக தனது சகோதரியிடம் கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆனால் அவர் மீண்டும் திரும்பாததால் விசாரணையில் அவரது உடல் இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.