துருக்கி மற்றும் சிரியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்படுமென டச்சு ஆராய்ச்சியாளர் ஒருவர் 3 நாட்களுக்கு முன்னரே ட்விட் செய்துள்ளார்.
இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிலநடுக்கத்தில் 4000 பேருக்கு மேற்பட்டோர் பலியானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இந்நிலையில், டச்சு ஆராய்ச்சியாளரான ஃபிரான்க் ஹூன்கர்பிட்ஸ் பெப்ரவரி 3 ஆம் திகதியன்று தனது ட்விட்டர் கணக்கில் மேற்படி நிலநடுக்கம் தொடர்பில் எச்சரித்திருந்தார்.
அதில், மத்திய மற்றும் தென் துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனான் போன்ற பகுதிகளில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.