Friday, July 4, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகோட்டாவிடம் சிஐடி 3 மணிநேரம் விசாரணை

கோட்டாவிடம் சிஐடி 3 மணிநேரம் விசாரணை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மூன்று மணிநேரம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.

ஜனாதிபதி மாளிகையில் இருந்து போராட்டக்காரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கோடியே எழுபது இலட்சம் தொகை தொடர்பில் கோட்டாபயவிடம் வாக்குமூலங்கள் நேற்று (06) பதிவு செய்யப்பட்டன.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டிற்குச் சென்று இந்த விசாரணைகளை நடத்தியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles