Monday, March 31, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பு துறைமுக நகரத்தில் சர்வதேச பாடசாலை

கொழும்பு துறைமுக நகரத்தில் சர்வதேச பாடசாலை

கொழும்பு துறைமுக நகரத்தில் சர்வதேச தரத்திலான பாடசாலையொன்றை ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகளை பிரித்தானிய சுயாதீன பாடசாலைகள் ஆராய்ந்து வருகின்றன.

கொழும்பு துறைமுக நகரத்தில் சர்வதேச பாடசாலையொன்றை ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் நோக்கில், பிரித்தானியாவிலுள்ள மூன்று முன்னணி சுயாதீன பாடசாலைகளின் சிரேஷ்ட தூதுக்குழுவொன்று, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு மற்றும் சிரேஷ்ட முகாமைத்துவத்துடன் கலந்துரையாடுவதற்காக இந்த மாத தொடக்கத்தில் நாட்டிற்கு விஜயம் செய்துள்ளது .

இந்தப் பாடசாலைகள் உலகின் மிகவும் மதிப்புமிக்க பாடசாலைகளாக கருதப்படுகின்றன.

தெற்காசியாவில் நட்பு நகரமாக வளர்ந்து வரும் துறைமுக நகரமான கொழும்பில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற கல்வி வசதிகளுடன் கூடிய பாடசாலையை நிறுவுவது இந்நாட்டு பிள்ளைகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கும் சர்வதேச ரீதியில் போட்டித் திறன் கொண்ட குழுவை உருவாக்குவதற்கும் சிறந்த வாய்ப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தெற்காசியாவில் சர்வதேச நகரமாக நிர்மாணிக்கப்படும் கொழும்பு துறைமுக நகரம், உலகின் பல நவீன வசதிகளுடன் கூடியதாக உள்ளது.

#Aruna

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles