Friday, March 21, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஒரு தொகை போலி இறப்பர் முத்திரைகள் மீட்பு

ஒரு தொகை போலி இறப்பர் முத்திரைகள் மீட்பு

எல்பிட்டிய பிரதேச சபையின் நீர் விநியோக பகுதியிலுள்ள கட்டிடத்தின் அறையொன்றிலிருந்து நாட்டின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த அரச அதிகாரிகள் பயன்படுத்தும் இறப்பர் முத்திரைகளை போன்ற ஒரு தொகை போலி இறப்பர் முத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கு அமைய குறித்த போலி இறப்பர் முத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

போலி ஆவணங்களைத் தயாரிப்பதற்காக இந்த இறப்பர் முத்திரைகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பாடசாலைகளின் அதிபர்கள், சட்டத்தரணிகள், பிரதேச செயலாளர்கள், பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச அதிகாரிகளின் உத்தியோகபூர்வ இறப்பர் முத்திரைகளை போன்ற போலி இறப்பர் முத்திரைகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles