Wednesday, December 17, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டு6600 லீற்றர் டீசலுடன் குடைசாய்ந்த பௌசர்!

6600 லீற்றர் டீசலுடன் குடைசாய்ந்த பௌசர்!

பேராதனை சரசவி உயன எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து மஹியங்கனை இ.போ.ச டிப்போவுக்கு 6600 லீற்றர் டீசலைக் கொண்டு சென்ற பௌசர் ஒன்று உடுதும்பர பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

உடுதும்பர பிரதேசத்தில் நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது பௌசரிலிருந்த 4000 லீற்றர் டீசல் வெளியேறியுள்ளதுடன், எஞ்சியுள்ள 2600 லீற்றர் டீசல் மீண்டும் பேராதனை எரிபொருள் களஞ்சியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதன்போது பௌசரின் சாரதி மற்றும் உதவியாள் ஆகியோர் காயமடைந்து உடதும்பர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் விபத்து தொடர்பான விசாரணைகளை உடதும்பர பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles