எதிர்வரும் நாட்களில் நாடளாவிய ரீதியில் நீர்வெறுப்பு நோய் வேகமாக பரவும் அபாயம் காணப்படுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில், இலங்கையில் அடிமட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட வெற்றிகரமான தடுப்பூசி திட்டத்தால், நீர்வெறுப்பு நோயால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.
எனினும் தற்போது அந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.
அதனால், வீதிகளில் உலாவும் நாய்களிடம் கவனமாக இருக்குமாறும், வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு உரிய தடுப்பூசிகளை பெற்று தர நடவடிக்கை எடுக்குமாறும் எச்சரிக்கப்படுகிறது.