எதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்ற சம்பிரதாய திறப்பு விழாவை ஐக்கிய மக்கள் சக்தி புறக்கணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் புதன் கிழமை நடைபெறவுள்ள கொள்கை பிரகடன திறப்பு விழா மற்றும் சமர்ப்பிப்பை தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கவுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதி பிரதம கொறடா நளின் பண்டார ஜயமஹா தெரிவித்துள்ளார்.
வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறவுள்ள ஜனாதிபதியின் கொள்கை அறிக்கை மீதான இரண்டு நாள் விவாதத்தையும் புறக்கணிக்க தீர்மானித்துள்ளோம்.
இந்த பயிற்சிகளில் நாங்கள் பார்வையாளர்களாக மாத்திரமே இருப்பதால் ஐக்கிய மக்கள் இந்த நிகழ்வுகளை புறக்கணிக்க முடிவு செய்தது என அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும், இறுதித் தீர்மானம் அனைத்துக் கட்சி உறுப்பினர்களுக்கும் விரைவில் அறிவிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.