Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரசாங்கத்தின் வருமானம் அதிகரிப்பு

அரசாங்கத்தின் வருமானம் அதிகரிப்பு

2023 ஜனவரி மாதம் இலங்கையின் மொத்த வருமானம் 158.7 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியால் அமுலாக்கப்பட்ட புதிய வரி அதிகரிப்புகள் காரணமாக இந்த வருமான அதிகரிப்பு இடம்பெற்றுள்ள போதும், வரி ஊடாக பெறப்பட்ட வருமானம் எவ்வளவு என்று அவரால் சொல்லப்படவில்லை.

கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் அரசாங்கத்தின் மொத்த வருமானம் 104.5 பில்லியன் ரூபாவாக இருந்தது.

எவ்வாறாயினும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் அரசாங்கத்தின் மொத்த செலவும் 500 பில்லியனைத் தாண்டியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles