Monday, April 21, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஒனேஷ் சுபசிங்க மரணம்: மேலதிக விசாரணைகள் ஆரம்பம்

ஒனேஷ் சுபசிங்க மரணம்: மேலதிக விசாரணைகள் ஆரம்பம்

இலங்கையில் கோடீஸ்வர வர்த்தகரான ஒனேஷ் சுபசிங்கவின் மரணம் கொலையா என்பதை அறிய ஜகார்த்தா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தொழிலதிபர் அண்மையில் தனது குடும்ப உறுப்பினர்களுடன் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிற்கு உல்லாசப் பயணம் சென்றுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொழிலதிபரின் பிரேசில் பிரஜையான மனைவி, நான்கு வயது மகள் மற்றும் மற்றொரு பிரேசில் பெண் ஆகியோர் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்துள்ளனர்.

ஒனேஷ் சுபசிங்க வெளிநாடு சென்ற பின்னர் தனது குடும்ப உறுப்பினர்களை தொடர்பு கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் படி, ஜகார்த்தா பொலிஸார் ஒனேஷ் சுபசிங்கவின் சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.

அதற்குள் அவரது மனைவி, மகள் மற்றும் பிரேசில் பெண் ஆகியோர் தங்கியிருந்த இடத்தை விட்டு வெளியேறிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles