யாழ்ப்பாணத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
அரியாலைப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு அவர் கைதானார்.
அரியாலை, பூம்புகாரை வசிப்பிடமாகக் கொண்ட தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கைதானவரிடமிருந்து 130 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது.