கதிர்காமம் – கொச்சபட்டானை பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு 05 நீலமணி கற்கள் கிடைத்துள்ளது.
கதிர்காம யாத்திரைக்கு செல்லும் மக்களுக்கான பூஜை பொருட்களை விற்பனை செய்யும் மூன்று வியாபாரிகளுக்கு இந்த நீலக்கல் கற்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
பல வருடங்களுக்கு முன்னர் கதிர்காமம் – கொச்சபட்டானை பிரதேசமானது இரத்தினக்கற்கள் அதிகம் காணப்பட்டதுடன், தற்போது மீண்டும் அந்த பகுதியில் இரத்தினக்கல் அகழ்வு செய்ய ஆரம்பித்துள்ளனர்.
மாணிக்கக் கற்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவ்விடத்திற்கு வருகை தரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த இடத்தில் தோண்டிய போது பாரிய கற்தொட்டி ஒன்று காணப்பட்டதுடன், குறித்த மூவரும் அதனை மேலும் ஆராய்ந்து வந்த நிலையில், குறித்த நீலக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட இரத்தினக்கற்கள் அலஹெர பிரதேசத்தில் உள்ள வர்த்தகர் ஒருவருக்கு ஐந்து கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.