இலங்கை மகளிர் கிரிக்கெட் மேம்பாட்டு ஆலோசகராக ஒலிம்பிக் பதக்கம் வென்ற இலங்கையின் முன்னாள் ஓட்டப்பந்தய வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது நியமனம் பெப்ரவரி முதலாம் திகதி முதல் அமலுக்கு வருகிறது.
இது தொடர்பில் சுசந்திகா ஜயசிங்க தெரிவிக்கையில்,
இந்த புதிய சவாலை நான் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறேன். ஏனெனில் இது விளையாட்டில் ஈடுபடவும் இளம் வீரர்களுக்கான சவால்களை எதிர்கொள்ளவும் எனக்கு வாய்ப்பளித்துள்ளது என்றார்.