Thursday, July 31, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுPTAவை நீக்குக - பிரித்தானியாவும் அமெரிக்காவும் கோரிக்கை

PTAவை நீக்குக – பிரித்தானியாவும் அமெரிக்காவும் கோரிக்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமை அறிக்கை இன்று (01) ஆராயப்பட்டுள்ளது.

அங்கு கருத்து தெரிவித்த பிரித்தானிய மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும் என தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல், ஓரினச்சேர்க்கையை குற்றமாக்க கருதுவதை நீக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ´உலகளாவிய கால ஆய்வு ´ குழு நடத்திய கூட்டத்தில், இந்நாட்டின் மனித உரிமைகள் அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

குழுவினால் மீளாய்வு செய்யப்படும் நாடுகளில் ஒன்றான இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான ஆய்வுகள் 2008, 2012 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்டன.

அரசாங்கம் வழங்கிய அறிக்கைகள், மனித உரிமை நிபுணர்கள் மற்றும் குழுக்களின் அறிக்கைகள், மனித உரிமைகள் ஒப்பந்த அமைப்புகள், தேசிய மனித உரிமை நிறுவனங்கள், பிராந்திய நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூகக் குழுக்களின் அறிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த மதிப்பாய்வு செய்யப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles