கம்பளை நகரில் தனியார் வங்கியொன்றின் தானியக்க பணவைப்பு இயந்திரத்தை கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 25ஆம் திகதி கேடிஎச் ரக வேனில் வந்த நான்கு பேர் இந்த கொள்ளை சம்பவத்தை மேற்கொண்டு, வங்கியின் பாதுகாவலரை நாற்காலியில் கட்டி வைத்துவிட்டு சம்பந்தப்பட்ட பணவைப்பு இயந்திரத்தை எடுத்துச் சென்றனர்.
சம்பவம் இடம்பெற்று சில மணித்தியாலங்களின் பின்னர் பேராதனையில் கைவிடப்பட்ட நிலையில் வேன் அதன் சாரதியுடன் கண்டுபிடிக்கப்பட்டது.
சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் ஏனைய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 22 வருடங்களாக இராணுவத்தின் விசேட அதிரடிப்படையில் கடமையாற்றிய ஒருவரும் உள்ளதாக பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.