குருநாகல் – தம்புள்ளை பிரதான வீதியின் கொகரெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளனர்.
தேவகிரி தித்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 62 வயதான தாயும், 39 வயதான மகனும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இபோச பேருந்தை முந்திச் செல்ல முற்பட்ட போது, அதனுடன் மோதுண்டு மோட்டார் சைக்கிள் கவிழ்ந்துள்ளது.
இதன்போது பேருந்தின் பின் சக்கரம் ஏறியதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.
கொகரெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொகரெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.