மீண்டும் நாளாந்த மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
கடந்த 2 நாட்களாக மின்னுற்பத்திக்கான மேலதிக நீர் விநியோகம் செய்யப்பட்டதால், மின்வெட்டு இடம்பெற்றிருக்கவில்லை.
எனினும் நீரேந்தும் பகுதிகளில் போதிய மழைவீழ்ச்சி கிடைக்காததன் காரணமாக, இனி மேலதிக நீரை விநியோகிக்க முடியாது என்று நீர் முகாமைத்துவ செயலகம் அறிவித்துள்ளது.
இதனால் தொடர்ந்தும் மின்வெட்டினை இடைநிறுத்த முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக மின்சார சபையின் பேச்சாளர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இன்றிரவு இதுதொடர்பான தீர்மானம் ஒன்று பேச்சுவார்த்தைகளின் பின்னர் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.