பி.எஸ்.எம் சார்ள்ஸ் தேர்தல் ஆணையத்தின் உறுப்புரிமையிலிருந்து விலகவில்லை என தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அச்சடிக்க அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதில் அவரது கையொப்பம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இளைஞர் வாக்குகள் தொடர்பான தகவல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலில் சார்ள்ஸ் கையொப்பமிட்டதை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உறுதிப்படுத்தினார்.
#Lankadeepa