நாட்டின் பொருளாதாரமும் சட்டவாட்சியும் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதால் என்ன பெருமை உள்ளதென கத்தோலிக்க திருச்சபை கேள்வியெழுப்பியுள்ளது.
நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள இவ்வேளையில் பெருமளவான பணத்தைச் செலவு செய்து நடத்தப்படும் சுதந்திரக் கொண்டாட்டத்தில் கர்தினால்கள் உட்பட கத்தோலிக்க திருச்சபையினர் பங்குபற்ற மாட்டார்கள் என தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார்.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தவறு செய்திருப்பதாக ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மன்னிப்பு கோருவதற்கு அவருக்கு உரிமை இல்லை அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(01) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அருட்தந்தை சிறில் காமினி இவற்றை குறிப்பிட்டுள்ளார்.