இலங்கையில் இருந்து வெளிநாடு செல்கின்றவர்களது எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதற்காக கடவுச் சீட்டுக்கும் அதிக எண்ணிக்கையானவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இந்தசூழ்நிலையை பயன்படுத்தி பொதுமக்களிடம் இருந்து பணத்தை மோசடி செய்கின்றவர்கள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
ஒருநாள் சேவை ஊடாக கடவுச் சீட்டைப் பெற்றுத் தருவதாக தெரிவித்து பல பேரிடம் நிதிமோசடி செய்த குழு ஒன்றைச் சேர்ந்த இரண்டு பேர் தலங்கமுவையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு 9 மற்றும் மாலபே ஆகிய பகுகளைச் சேர்ந்த 47 மற்றும் 65 வயதான இரண்டு பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து கடவுச் சீட்டு பெறுவதற்கான போலியாக தயாரிக்கப்பட்ட டோக்கன்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.