எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான அதிவிசேட வர்த்தமானிகள் வெளியாக்கப்பட்டுள்ளன.
உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் மார்ச் மாதம் ஒன்பதாம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த போதும், அதற்கான வர்த்தமானி வெளியிடப்படாமல் இருந்தது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையில் முரண்பாடு இருப்பதாகவும் அதன் காரணமாக இந்த வர்த்தமானி வெளியாகாமல் இருப்பதாகவும் கருத்துக்கள் சொல்லப்பட்டன.
எவ்வாறாயினும் மாவட்ட தேர்தல் தெரிவித்தாட்சி அதிகாரிகள் ஊடாக தற்போது 25 மாவட்டங்களுக்குமான உள்ளூராட்சி மன்ற தேர்தல் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.