பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான ‘நின்ஜா’, கொழும்பு வடக்குப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (31) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்படும் போது சந்தேகநபர் 8 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளையும், ஹெரோயின் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 6 இலட்சம் ரூபா பணத்தையும் வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மட்டக்குளி ஹேனமுல்ல முகாமை அண்மித்த பகுதியில் இவர் கைது செய்யப்பட்டார்.
நின்ஜா எனப்படுபவர் 42 வயதுடைய பெண் ஒருவர் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.