Saturday, January 31, 2026
32.2 C
Colombo
செய்திகள்உலகம்டொப் 10 செல்வந்தர்கள் பட்டியலில் இருந்து வெளியேறினார் அதானி

டொப் 10 செல்வந்தர்கள் பட்டியலில் இருந்து வெளியேறினார் அதானி

உலக செல்வந்தர் பட்டியிலில் 11 ஆவது இடத்துக்கு கௌதம் அதானி பின்தள்ளப்பட்டுள்ளார்.

ப்ளூம்பர்க் பில்லியனர் பட்டியல் இதனை வெளியிட்டுள்ளது.

ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கையின் எதிரொலியாக கவுதம் அதானி, உலக பணக்காரர்கள் பட்டியலிலிருந்து சரிந்துள்ளார்.

பங்குகளை கையாளுதல் மற்றும் அக்கவுண்ட்ஸ் மோசடியில் பங்கேற்றதாக அதானி குழுமம் தொடர்பாக, ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி, அதானி குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான கவுதம் அதானி, குழுமத்தின் 7 முக்கிய நிறுவனங்களின் பங்கு விலை, அதிகரிப்பு மற்றும், அவரது நிகர மதிப்பு சுமார் $120 பில்லியன் வரை உயர்ந்தது. மேலும் இந்த நிறுவனங்கள் கடந்த 3 ஆண்டுகளில் சராசரியாக 819% சதவீதம் அதிக லாபம் அடைந்துள்ளதாக தெரிவித்திருந்தது.

இது குறித்து அதானி குழுமம் கூறும்போது,

அதானி எண்டர்பிரைசஸ் எப்பிஓ(FPO) வை சேதப்படுத்தும் நோக்கில் ஹிண்டன்பர்க் இந்த அறிக்கையை வெளியிட்டதாக கூறியது. தவறான தகவல் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுடன் குழுமத்தின் நற்பெயரை பாதிக்கும் வகையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது இது எங்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது என்று அதானி குழும ஜுகேஷிந்தர் சிங் மேலும் கூறினார்.

ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கையின் மூலம், அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் ரூ. 80,000 கோடிக்கு மேல் இழந்து, 119 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த அதானி, நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் இதனால் 120 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்துமதிப்புடன் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

#The Times of India

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles