Friday, July 18, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசுதந்திர தின விழாவுக்காக சிறிய தொகையே செலவிடப்படுகிறது - அமைச்சர் பந்துல

சுதந்திர தின விழாவுக்காக சிறிய தொகையே செலவிடப்படுகிறது – அமைச்சர் பந்துல

ஒரு நாடு என்ற ரீதியில் மேற்கொள்ளப்படும் செலவீனத்தின் அளவைக் கருத்தில் கொண்டு வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் சுதந்திர தினத்திற்காக அரசாங்கம் மிகக் குறைவான செலவையே மேற்கொள்வதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பெரிய தொகையை ஒப்பிடும்போது, ​​ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சுதந்திர தினத்திற்கு மிகக் குறைவான செலவே ஏற்படுகிறது. ஒரு நாடு தேசிய சுதந்திர தின விழாவை நடத்தாமல் இருக்க முடியாது. ஒரு நாட்டின் பெருமையை எடுத்துரைக்க வேண்டியது மரபு.

ஒவ்வொரு நாடும் இந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகிறது. பாரம்பரிய செலவுகள் வேண்டாம் என்று சொல்ல முடியாது. எமக்கு சிரமங்கள் ஏற்பட்டாலும்,நாடாளுமன்றத்தை நடத்துவதற்கான செலவினங்களையோ, நீதித்துறைக்கான செலவினங்களையோ, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிற திட்டங்களுக்கான செலவினங்களையோ குறைக்க முடியாது. எனினும் செலவுகளை குறைக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஒத்துழைப்பைப் பெற இந்த 75வது சுதந்திரக் கொண்டாட்டம் மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்பட வேண்டும் என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles