Saturday, July 5, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிறுநீரக மோசடி - தரகர் ஒருவர் கைது

சிறுநீரக மோசடி – தரகர் ஒருவர் கைது

வெல்லம்பிட்டி பிரதேசத்தில் மனித உடல் உறுப்புகளை பணத்திற்காக பெற்றுக்கொடுக்கும் தரகர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின் போது சந்தேகநபர், 02 கையடக்க தொலைபேசிகளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொரளை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையொன்று, வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களை ஏமாற்றி பணம் தருவதாகக் கூறி சிறுநீரகத்தை பெற்றுக்கொள்வதாக பெண் ஒருவர் உட்பட ஐவர் பொரளை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கொலன்னாவ பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (31) அளுத்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles