Saturday, January 31, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோரிடம் மன்னிப்பு கோரினார் மைத்திரி

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோரிடம் மன்னிப்பு கோரினார் மைத்திரி

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(31) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து, இவ்வாறு பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார்.

தனது ஆட்சிக்காலத்தில் இவ்வாறானதொரு துயரச் சம்பவம் இடம்பெற்றமைக்காக அவர் மன்னிப்புக் கோரினார்.

“நான் குற்றம் செய்ததாக தீர்ப்பில் கூறப்படவில்லை, ஆனால் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் செய்யும் குற்றங்களுக்கு ஜனாதிபதியும் பொறுப்புக்கூற வேண்டும். அதுதான் இந்த வழக்கிற்கும் எனக்கும் உள்ள தொடர்பு” என்று அவர் விளக்கமளித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles