Friday, July 18, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையின் பணவீக்கம் ஜனவரியில் 54.2% ஆக குறைந்தது

இலங்கையின் பணவீக்கம் ஜனவரியில் 54.2% ஆக குறைந்தது

இலங்கையின் முதன்மை பணவீக்க விகிதம் ஜனவரியில் 54.2% ஆக குறைந்துள்ளதாக புள்ளிவிபரத் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது.

முன்னதாக டிசம்பரில் முதன்மை பணவீக்கம் 57.2% ஆக பதிவாகியிருந்தது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின்படி, டிசம்பவரில் 64.4% ஆக இருந்த உணவுப் பணவீக்கம் 60.1% ஆக குறைந்துள்ளது.

அவ்வாறே, உணவு அல்லாத வகை பணவீக்கம் 51% ஆகவும் பிரதிபலித்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பணவீக்கம் குறைகிறது. மின்சார விலையில் அதிகரிப்பு இல்லை என்றால், அடுத்த மாதம் பணவீக்கம் 51.9% ஆகவும் மார்ச் மாதத்திற்குள் 50% க்கும் குறைவாகவும் இருக்கும் என்று கொழும்பை தளமாகக் கொண்ட முதலீட்டு நிறுவனமான ஃபர்ஸ்ட் கெப்பிட்டலின் ஆய்வாளர் டிமந்த மெத்யூ தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles