Saturday, September 20, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின் கட்டணம் அதிகரித்தால், பாண் விலையும் அதிகரிக்கும்

மின் கட்டணம் அதிகரித்தால், பாண் விலையும் அதிகரிக்கும்

மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் பாண் உள்ளிட்ட பேக்கரி உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் என பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

பேக்கரிகளின் மின்சாரக் கட்டணம் தற்போதைய விலையை விட இருமடங்காக அதிகரித்துள்ளது என அச் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் மீண்டும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தினால் பேக்கரி தொழில்துறையால் அதனை தாங்கிக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

மா, முட்டை மற்றும் பிற பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருள், மின்சார கட்டணங்கள் அதிகரிப்பு காரணமாக பேக்கரி தொழில் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இந்த நிலையில் மீண்டும் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டால் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles