Saturday, June 27, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தல் வர்த்தமானிக்கு உறுப்பினர்களின் கையொப்பம் அவசியமன்று

தேர்தல் வர்த்தமானிக்கு உறுப்பினர்களின் கையொப்பம் அவசியமன்று

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு, தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் கைச்சாத்திட்டு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட வேண்டிய அவசியமில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களால் தேவையான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி இன்று (30) அல்லது நாளை (31) அச்சிடுவதற்காக அரச அச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என கூறப்படுகிறது.

இந்த வர்த்தமானி இதுவரை அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பப்படவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று (29) தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles