Sunday, August 17, 2025
28.9 C
Colombo
செய்திகள்உலகம்இந்தியாவில் சம்பவம்: சுகாதார அமைச்சர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பொலிஸ் அதிகாரி

இந்தியாவில் சம்பவம்: சுகாதார அமைச்சர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பொலிஸ் அதிகாரி

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் சுகாதார அமைச்சர் நபா கிஷோர் தாஸ் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அவர் உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் உபபரிசோதகர் ஒருவரினால் இரு முறை அவரது மார்பில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிகின்றன.

அவர் அருகாமையில் உள்ள வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதுடன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக புவனேஸ்வர் பகுதியிலுள்ள வைத்தியசாலைக்கு உலங்கு வாநூர்தி மூலம் கொண்டு செல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த அமைச்சர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி பிரயோகம் செய்த உப பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், துப்பாக்கி சூட்டுக்கான காரணம் குறித்து எந்தவிதமான தகவலும் வெளியாகவில்லை.

ஒடிசா முதலமைச்சர் அமைச்சர் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளதுடன், பொலிஸ் குற்றவியல் விசாரணை பிரிவினரை உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பணித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles