Wednesday, August 27, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் 42 விமானிகள் இராஜினாமா?

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் 42 விமானிகள் இராஜினாமா?

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் 42 விமானிகள் கடந்த வாரம் இராஜினாமா கடிதங்களைக் கையளித்ததாகவும், 85 விமானிகள் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் சான்றிதழ் கடிதங்களுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானி ஒருவர் 10,000 டொலர் மாதாந்த சம்பளமாகப் பெறுகிறார்.

ஆனால் டொலர் மதிப்பு 225 ரூபா என்ற குறைந்த அளவில் கணக்கிடப்படுகிறது.

மற்ற சர்வதேச விமான நிறுவனங்களின் விமானிகளுக்கு 370 ரூபா என கணக்கிடப்பட்டுள்ளது.

அவர்கள் 30,000 டொலர் முதல் 40,000 டொலர் வரை வரியில்லா சம்பளம் பெறுகிறார்கள் என்று அந்த அதிகாரி கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles