ரயிலில் காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு செல்லும் திட்டம் குறித்து விரிவான அறிக்கையை தயாரிக்குமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அண்மையில், ரயில்வே திணைக்களம் ஹாலிஎல, ஒஹிய, அம்பேவெல, பட்டிபொல மற்றும் நானுஓயா போன்ற ரயில் நிலையங்களை மையமாகக் கொண்டு, பல விசேட ரயில் பெட்டிகளைப் பயன்படுத்தி பரீட்சார்த்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
பயணிகள் போக்குவரத்தில் இருந்து அகற்றப்பட்ட 5 ரயில் பெட்டிகள் பொருத்தமான வகையில் மாற்றியமைக்கப்பட்டு பரீட்சார்த்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனவே, மரக்கறிகள் மற்றும் பழங்களை ரயிலில் கொண்டு செல்லும் முறையை விரைவில் தயார் செய்யுமாறு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் பந்துல குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.