இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு டொலர்களை வழங்குவதை மத்திய வங்கி நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், இது தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க கருத்து தெரிவித்திருந்தார்.
வங்கி முறைமையில் தற்போது போதுமான அளவு அந்நியச் செலாவணி இருப்பதாகவும், சில அத்தியாவசிய தேவைகளுக்காக வங்கி முறையின் மூலம் டொலர்களைப் பெற முடியாவிட்டால் மட்டுமே, மத்திய வங்கி அதில் தலையிடும் என்றும் கூறினார்.