Friday, January 17, 2025
24.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாலக்க கொடஹேவா உள்ளிட்ட மூவர் விடுதலை

நாலக்க கொடஹேவா உள்ளிட்ட மூவர் விடுதலை

அரச நிதி மோசடி வழக்கிலிருந்து பிணையங்கள் மற்றும் பரிவர்தனை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் நாலக்க கொடஹேவா உள்ளிட்ட மூவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

நீண்ட விசாரணைக்கு பிறகு உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பை அறிவித்தார்.

தீர்ப்பை அறிவித்த நீதிபதிஇ பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிக்க அரசுத் தரப்பு முன்வைத்த ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்று குறிப்பிட்டார்.

அதன்படிஇ பிரதிவாதிகள் விடுவிக்கப்படுவதாக உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

‘இளைஞர்களுக்கான நாளை’ என்ற அமைப்பிற்காக அனுமதி வழங்கப்பட்ட 50 இலட்சம் ரூபா நிதியை சிலோன் பிரீமியர் ஸ்போர்ட்ஸ் லிமிட்டட் நிறுவனத்தின் கணக்கிற்கு மாற்றியமை உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிணையங்கள் மற்றும் பரிவர்தனை ஆணைக்குழுவின் முன்னாள் பிரதி பணிப்பாளர் நாயகம் தம்மிக்க பெரேரா மற்றும் ‘இளைஞர்களுக்கான நாளை’ அமைப்பின் விளையாட்டு பிரிவின் பணிப்பாளர் டொனி இப்ராஹிம் ஆகியோர் இந்த வழக்கின் ஏனைய பிரதிவாதிகளாவர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles