தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பி.எஸ்.எம். சார்ள்ஸ் பதவி விலகியுள்ளார்.
அவர் தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்திருப்பதாக, ஜனாதிபதி செயலகத்தின் தகவல்கள் தெரிவித்தன.
அவர் பதவி விலகியதைத் தொடர்ந்து புதிய உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படும் வரையில் உள்ளாட்சி தேர்தலுக்கான வர்த்தமானியை வெளியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.