நாட்டிலிருந்து தப்பிச் சென்ற பாதாள உலகக் குழுத் தலைவர் கஞ்சிபானி இம்ரான் ஓமானில் இருந்து டுபாய் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், அவர் புஸ்ஸா சிறைச்சாலையில் பழக்கம் ஏற்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டு மீண்டும் தனது வழமையான கடத்தல் வேலையை ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற கஞ்சிபானி இம்ரான் நாட்டை விட்டு தப்பிச் சென்றதும், அதற்காக வெளிநாட்டு உளவாளிகளின் உதவியையும் அவர் பெற்றிருப்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
#Aruna